சரும நிறத்தை அதிகரிக்கும் மாதுளம்

Sekar Tamil
சருமம் பொலிவுடன், அழகாக இருக்க யாருக்கு தான் விருப்பம் இருக்காது. அதற்காக கடைகளில் கிடைக்கும் க்ரீம்களை நாம் உபோயோகப்படுத்த கூடாது. ஏனெனில் விரைவில் முதுமை தோற்றம் வந்துவிடும்.


இயற்கை மூலிகளை பயன்படுத்தி சருமத்தை அழகாக்கலாம். அதன் வழிமுறைகளை இப்போது நாம் பார்க்கலாம். 


சரும அழகை அதிகரிப்பதில் மாதுளம் பழத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் சருமத்தை இளமையாக வைக்க செய்யும். 


தேவையான பொருட்கள் :


மாதுளை பொடி - 1 டேபிள் ஸ்பூன் 
தேன் - 1 டேபிள் ஸ்பூன் 
எலுமிச்சை சாறு - 2-3 துளிகள் 
தயிர் - 1 டேபிள் ஸ்பூன் 
தக்காளி சாறு - 1 டேபிள் ஸ்பூன் 
பால் - 2 டேபிள் ஸ்பூன் 


மாதுளம் பழ தோலின் பொடியோடு, தேன் மற்றும் எலுமிச்சை சாறு, தயிர், தக்காளி சாறு, பால் ஆகியவற்றை கலந்து கொள்ள வேண்டும். 
பிறகு அந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 


இந்த பேஸ் பேக் நன்கு உலர்ந்த பின்பு, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். 


இதை வாரம் ஒருமுறை உபோயோகப்படுத்தி வந்தால், விரைவில் நல்ல மாற்றம் தரும்.



Find Out More:

Related Articles: