இன்றைய காலத்தில், ஆண்கள், பெண்கள் என இருபாலினரும் தலைமுடி பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதற்கான இயற்கை முறை குறிப்புகளை நாம் இன்றைய அழகு குறிப்பு தகவலில் பார்க்கலாம்.
1. கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து, அதனை சிறுசிறு துண்டுகளாக்கி, தேங்காய் எண்ணையில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால், வழுக்கை மறையும்.
2. வெந்தயம் மற்றும் குன்றிமணி இரண்டையும் பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணையுடன் கலந்து தலையில் தடவி வந்தால், முடி கொட்டுவது நிற்கும்.
3.இளநரை பிரச்சனைகள் உள்ளவர்கள், நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை காணாமல் போய்விடும்.
4. வேப்பிலையை தண்ணீரில் நன்கு கொதிக்க விட்டு, மறுநாள் அந்த தண்ணீரை தலை மண்டையில் தேய்த்து வந்தால், முடி கொட்டுவது மாறும்.
5. கருவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணையுடன் கலந்து, காய்ச்சி முடியில் தடவி வந்தால், முடி நன்கு வளரும்.