காஜலுக்கு கிடைத்த ஷாக் முத்தம்

SIBY HERALD
நடிகை காஜல் அகர்வால் சமீப காலங்களாக இளம் நாயகர்களுடன் இனைந்து நடிக்க தயக்கம் காட்டாமல் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் தெலுங்கில் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் என்ற பிளாப் ஹீரோவுடன் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.



அதில் ஒன்றை இவரை அறிமுகப்படுத்திய தேஜா இயக்க இன்னொரு படத்தை ஸ்ரீனிவாஸ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி வருகிறார். இந்த இரண்டாவது படம் தான் கவசம். இந்த படத்தில் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் காவல்துறை அதிகாரியாக நடிக்க அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் மெஹரீன் பிரசாத நடித்துள்ளனர்.



நேற்று நடந்த இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் யாரும் எதிர்பாரா விதமாக கேமராமேன் சோட்டா நாயுடு காஜலின் கன்னத்துல முத்தமிட்டார். அரங்கத்தில் அனைவரும் ஆடிப்போயிருக்க அந்த எதிர்பாரா முத்தத்தை கூலாக எடுத்துக்கொண்ட காஜல் சோட்டா நாயுடு தனது குடும்ப உறுப்பினர் போன்றவர் என்று கூறி நிலைமையை நார்மலாக்கினார். 


Find Out More:

Related Articles: