அக்கா... தங்கை பைலட்டுகள்... வானில் பறந்தது 777 போயிங்...

Sekar Tamil
இஸ்லாமாபாத்:
விமானத்துக்கு 2 பைலட்டுகள்... அவங்க 2 பேரும் அக்கா-தங்கையாக இருந்தால்... ஆச்சரியமும்... சாதனையும்தானே... அப்படிதானே நடந்துள்ளது.


பாகிஸ்தானில் விமானி ஆக பணிபுரியும் அக்கா- தங்கை இருவரும் ஒரே ‘போயிங் 777’ ரக விமானத்தை சமீபத்தில் ஓட்டி சாதனை படைத்துள்ளனர்.


பாகிஸ்தானை சேர்ந்தவர் மரியம் மசூத். இவர் பாகிஸ்தான் இன்டர்நே‌ஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் பெண் விமானி ஆக இருக்கிறார். போயிங் 777 ரக விமானம் ஓட்டி வருகிறார்.


இவரது தங்கை எர்ரம் மசூத். இவரும் விமானிதான். இவரும் பாகிஸ்தான் இன்டர்நே‌ஷனல் ஏர்லைன்சில்தான் பணியாற்றுகிறார்.
இந்நிலையில் எர்ரம் மசூத் பாகிஸ்தான் இன்டர்நே‌ஷனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் போயிங் 777 ரக விமானம் ஓட்டும் அளவுக்கு பதவி உயர்வு பெற... அப்புறம்தான் நடந்துள்ளது இந்த சாதனை.


அக்கா-தங்கை இருவரும் ஒரே ‘போயிங் 777’ ரக விமானத்தை சமீபத்தில் ஓட்டி சாதனை படைத்தனர். இத்தகவலை பாகிஸ்தான் இன்டர்நே‌ஷனல் ஏர்லைன்ஸ் செய்தி தொடர்பாளர் தன்யால் ஹிலானி தெரிவித்துள்ளார். விமான சேவையில் இப்படி அக்கா-தங்கை இருவரும் ஒரே விமானத்தை பைலட்டுகளாக இருந்து ஓட்டியது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.


லாகூர்-கராச்சி-மான் செஸ்டர், நியூயார்க் மற்றும் லண்டனுக்கு விமானம் ஓட்டியுள்ளனர். இது எப்படி இருக்கு!


Find Out More:

Related Articles: