இந்திய விமானப்படையில் விமானிகளான 3 பெண் சிங்கங்கள்

Sekar Chandra
புதுடில்லி:
இந்திய விமானப் படை வரலாற்றில் முதன்முறையாக போர் விமானங்களை இயக்கும் தகுதி பெற்றுள்ள 3 பெண்கள் இன்று விமானிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். வாழ்த்துக்கள் பெண் சிங்கங்களே...
இந்திய விமானப்படைக்கு சொந்தமான போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் மட்டுமே பெண்கள் தற்போது விமானிகளாக உள்ளனர்.


இனி, போர் விமானங்களிலும் ஆர்வமுள்ள இளம்பெண்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம் என்று இந்திய விமானப்படை தளபதி ஆருப் ராஹா கடந்த ஆண்டே தெரிவித்திருந்தார். அது தற்போது நிரூபணம் ஆகி உள்ளது.


போர்விமானங்களில் ஆண்களைப்போல் பெண் விமானிகளும் இனி பைலட்களாக பணிபுரிய ராணுவ அமைச்சகம் கடந்த 24-10-2015 அன்று ஒப்புதல் அளித்தது. இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில் தற்போது பயிற்சி பெற்றுவரும் பெண்களில் இருந்து இதற்கான முதல்குழுவினர் தேர்வு செய்யப்படுவார்கள் என இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்திய விமானப்படையில் தற்போது சுமார் 1500 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 90 பேர் விமானிகளாகவும் 14 பேர் வழிகாட்டிகளாகவும் பணிபுரிகின்றனர். மீதமுள்ளவர்கள் பல்வேறு துறைகளில் பணிபுரிகின்றனர். 


இந்நிலையில், போர் விமானங்களை இயக்கும் பயிற்சிகளை முடித்து முழுத்தகுதி பெற்றுள்ள பாவனா காந்த், மோகனா சிங், அவனி சதுர்வேதி ஆகிய 3 பெண்கள் இன்று இந்திய விமானப் படையில் விமானிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த பெண் சிங்கங்களுக்கு நாமும் பாராட்டுக்கள் தெரிவிப்போம்.



Find Out More:

Related Articles: