அடுத்த அரட்டைக்கு தயார் ஆகுங்க... கூகுள் அதிரடி...

frame அடுத்த அரட்டைக்கு தயார் ஆகுங்க... கூகுள் அதிரடி...

Sekar Tamil
அமெரிக்கா:
கூகுள் நிறுவனம் தனது புதிய வீடியோ அரட்டை செயலியை(Video Chat App) பிரத்யேகமாக ஸ்மார்ட்போன்களுக்காக வெளியிட்டுள்ளது.


கூகுள் டியோ செயலி ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் ஐபோன்களில்  செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் டியோவில் உள்ள ஒரு சிறந்த அம்சம் "நாக் நாக்”. இது அண்ட்ராய்டு போன்களுக்கு மட்டும் உள்ளதாகும். அண்ட்ராய்டு போனில் அழைப்பு பெறும் போது, அழைப்பை எடுக்கும் முன்னே மோபைல் திரையில் அழைப்பாளரிடம் இருந்து நேரடி வீடியோ காண்பிக்கப்படுகிறது.


இந்த செயலி வேகமாகவும், பயன்படுத்துவதற்கு எளிதானதாகவும்  வீடியோ அரட்டையை சிக்கலற்றதாகவும் மாற்றி உள்ளது. இது ஆண்ட்ராய்டு உபயோகிப்பாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த செயலியின் பயன்பாடு வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று தெரிகிறது. ஆண்ட்ராய்டு மார்க்கெட்டில் இது புதுசு கண்ணா புதுசு என்றுதான் சொல்ல தோன்றுகிறது. 


Find Out More:

Related Articles:

Unable to Load More