ரியாத்:
அவங்க விட்ட ஏவுகணையை வழிமறித்து தாக்கியதாக சவுதியில் இருந்து வரும் தகவல்களால் பெரும் பதற்றம் உருவாகி உள்ளது. விஷயம் என்னன்னா?
ஏமன் நாட்டில் இருந்து இன்று ஏவப்பட்ட சக்திவாய்ந்த ஏவுகணையை சவுதி அரேபியா இடைமறித்து தாக்கி அழித்துள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள ஆசிர் மாகாணத்தின் அபா நகரை நோக்கி இன்று காலை சுமார் 6.10 மணியளவில் ஒரு சக்திவாய்ந்த ஏவுகணை பாய்ந்து சென்றுள்ளது. இதை அறிந்த சவுதி அதை கமீஸ் முஷைத் நகரின் அருகே வான்வெளியில் இடைமறித்து தாக்கி அழித்தது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏமன் நாட்டில் இருந்து ஏவப்பட்டதாக கருதப்படும் இந்த ஏவுகணையின் மூலம் ஏமனில் உள்ள ஹவுத்தி போராளிகள் பகைநாடான சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்த முயன்றிருக்கலாம் என தெரியவருகிறது. இதனால் சவுதிமக்கள் மத்தியில் பெரும் பதற்றம் உருவாகி உள்ளது. இதனால் கண்காணிப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.