வந்திடுச்சு... வந்திடுச்சு... இந்திய சந்தைக்கு ஜியோமி வந்திடுச்சு

Sekar Chandra
மும்பை:
வந்திடுச்சு.. வந்திடுச்சு... ஜியோமி எம்ஐ மேக்ஸ், எம்ஐயுஐ ஸ்மார்ட்போன் ஆகியவை இந்திய சந்தைகளை ஆக்கிரமிக்க வந்திடுச்சு. 


போன மாதமே சீனாவில் இந்த ஸ்மார்ட் போன்கள் விற்பனைக்கு வந்தது. மூன்று வகையாக வெளியிடப்பட்டது. தொடர்ந்து டில்லியில் இந்த வகை 2 ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டுள்ளது.


16 மெகா பிக்சல் பின்புற கேமரா, 5 மெகா பிக்சல் முன் கேமரா, 85 டிகிரி வைட் ஆங்கிள் திரை என ஸ்மார்ட்டாக உள்ள  இந்த போன்கள் மக்களை அதிகம் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அதுமட்டுமா? இதில் இன்ஃபரா ரெட் எமிட்டர் பொருத்தப்பட்டு உள்ளதால் இது ஒரு சென்சாராகவும், உலகளாவிய ரிமோட் கண்ட்ரோலாகவும் செயல்படும் என்று தகவல்கள் வெளிவந்து உள்ளது.


இந்த மொபைல் போன்களில் Hungama Play என்ற "ஆப்" பதிவிறக்கம் செய்து கொண்டால் 3 மாதங்களுக்கு இலவச திரைப்படத்தையும், ஒரு ஆண்டுக்கு இலவச இசையையும் கேட்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை முதல் பத்து லட்சம் பேருக்கு மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Find Out More:

Related Articles: