தோனிக்கு லதா மங்கேஸ்கர் வேண்டுகோள்!
அரையிறுதி போட்டியில் இந்தியா வெற்றிக்காக தோனி விளையாடியபோதிலும் கடைசி நேரத்தில் ரன் அவுட் ஆனார். இதனால் போட்டி முடிவு எதிராக திரும்பிவிட்டது.
இந்நிலையில் தோனியின் ஆட்டம் குறித்து கருத்து பதிவாகி வருகிறது. தோனி ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டும் என்று சிலர் கூறியுள்ளார்கள்.இந்நிலையில் பாடகியும் பாரத ரத்னா விருது பெற்றவருமான லதா மங்கேஷ்கர் டுவிட்டர் பக்கத்தில் தோனி ஓய்வு முடிவை எடுக்கவுள்ளதாக செய்தி கேட்டு வருகிறேன். தயவுசெய்து தோனி ஓய்வு எடுக்க வேண்டாம்.
தோனி சேவை நாட்டுக்கு தேவை. ஓய்வு முடிவை இப்போது அறிவிக்க வேண்டாம் என்பதே என்வேண்டுகோள் என தெரிவித்துள்ளார்.