ஷமி ஹாட்ரிக் பற்றி சேத்தன் ஷர்மா!

SIBY HERALD
1987 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய பந்து வீச்சாளர் சேத்தன் ஷர்மா எடுத்த ஹாட்ரிக்  இப்போதைய இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்துக்கு மொகமட் ஷமி எடுத்த ஹாட்ரிக்கினால் வந்திருக்கிறது. மொகமட் ஷமி மூலம் தன் பெயர் தெரியவந்திருப்பது குறித்து  சேத்தன் ஷர்மா கூறியிருப்பது:  


பல ஆண்டுகளுக்கு முன் செய்த சாதனையை நம் வீரர் ஒருவரே மீண்டும் செய்வது மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கிறது . ஷமி 3வது விக்கெட்டை எடுத்தவுடன் 32 ஆண்டுகளுக்கு முன் நாக்பூர் மைதான நினைவுகள் மாறின.



இப்போதைய தலைமுறையினருக்கு  சேத்தன் ஷர்மா   ஷமி மூலம் தெரியவந்ததற்கு  ஷமிக்கு நன்றி. இருவரும் வலது கை வேகப்பந்து வீச்சாளர்கள், ஹாட்ரிக் விக்கெட்டில் லெக் ஸ்டம்பைப் பெயர்த்தோம்,தாடியும் ஒரு ஒற்றுமை என்று கூறினார் சேத்தன் ஷர்மா.


Find Out More:

Related Articles: