200... 200 விக்கெட் வீழ்த்தினார்... அசத்தல் அஸ்வின்!

Sekar Tamil
கான்பூர்:
அசத்தல் அஸ்வின் ஆகியிருக்கிறார் நம்ம ஆளு... எப்படி தெரியுங்களா? விரைவாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இது எப்படி இருக்கு.


கான்பூர் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் விக்கெட்டை கைப்பற்றி இந்த சாதனையை தன் வசமாக்கி உள்ளார் அஸ்வின். 


இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 262 ரன்னில் சுருண்டு விழ... கடைசி 8 ரன்னில் 5 விக்கெட்டுக்களை இழந்தது. அஸ்வின் 4 விக்கெட்டுகளை தன் வசப்படுத்தினார். இதன் மூலம் 197 விக்கெட்டுகள் எடுத்து இருந்தார்.


இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணி தொடக்க வீரர்கள் குப்தில் (0), லாதம் (2) அடுத்தடுத்து அஸ்வின் பந்தில் ஆட்டம் இழக்க... தனது வரலாற்று சாதனையின் அருகில் வந்து நின்றார் அஸ்வின். இதையடுத்து வந்த வி்ல்லியம்சனை 25 ரன்னில் அஸ்வின் எல்.பி.டபிள்யூ. ஆக்க... சாதனையை கைப்பற்றினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 200 விக்கெட்டுகள் எடுத்தார்.


அதுமட்டுமா? விரைவாக 200 விக்கெட்டுக்களை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்று அசத்தல் அஸ்வின் ஆகிவிட்டார். 


Find Out More:

Related Articles: