மும்பை:
காதல் வந்தது... கல்யாணம் செய்ய போகிறேன்... என்று சிக்சர் மன்னன் யுவராஜ் பாடாத குறைதான். என்ன விஷயம் என்றால்...
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங். இவரை பற்றி யாரும் அறிமுகம் செய்ய வேண்டிய தேவை இல்லை. இவருக்குதான் இப்போது திருமணம் நடக்க இருக்கிறதாம்.
என்னங்க திடீர்ன்னு கேட்கக்கூடாது. இவர் பாலிவுட் நடிகை ஹேசல் கீச்சை காதலித்து வந்தார். இப்போ... இவர்களின் திருமணத்தை யுவராஜின் தாய் ஷப்னம் சிங் உறுதி செய்துள்ளார். வரும் டிசம்பர் மாதம் இவங்க திருமணம் நடக்குதாம்.. நடக்குதாம்...
யுவராஜின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதிக்கு முன்னதாகவே திருமணம் நடைபெறும் என்று ஷப்னம் சிங் தெரிவித்துள்ளார். இந்த ஹேசல் கீச் யாருன்னு தெரியுங்களா... பில்லா, பாடிகார்ட் போன்ற படங்களில் நடித்தவர்தான் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மா சம்மதத்துடன் காதல் திருமணம் செய்ய இருப்பதால் உற்சாகத்தில் உலா வருகிறார் யுவராஜ் சிங். அடிப்பா... வெளுத்து வாங்குப்பா...