"வாடா" போட்டுச்சு பாருங்க 4 ஆண்டுகள் "தடா"

Sekar Tamil
ரியோ:
ஐயோ... போச்சே... போச்சே... வந்திடு... உனக்கு போட்டாச்சு தடா என்று வாடா 4 ஆண்டுகள் இந்திய மல்யுத்த வீரர் நரசிங் யாதவிற்கு தடை விதித்துள்ளது. 


இந்திய மல்யுத்த வீரர் நரசிங் யாதவ் (26). கடந்த 2015ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்று ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார்.


இந்நிலையில் இவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 'மெட்டாடியனன்' என்ற ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானது. ஆனால் இது 'சக ஜீனியர் வீரர் செய்த சதி செயல்' என்று நரசிங் வாதாட, தேசிய ஊக்க மருந்து சோதனை மையம் ('நாடா') இவரை விடுவித்தது.


ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியுள்ள இவர் போட்டிக்கு தயாராகி வந்தார்.


இந்நிலையில், 'நாடாவின்' முடிவை சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு மையம் ('வாடா') எதிர்த்தது. நரசிங் பங்கேற்பு குறித்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் முறையிட இப்போது நரசிங்கின் ஒலிம்பிக் கனவு தகர்ந்துள்ளது.


தொடர்ந்து நடந்த 'வீடியோ கான்பரன்ஸ்' விசாரணையில், நரசிங் சார்பில் வக்கீல் விடுஸ்பத் சிங்கானியா வாதாடினார். இருப்பினும் நரசிங்கிற்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதித்து 'வாடா' உத்தரவிட்டது. இதனால் நரசிங்கின் ஒலிம்பிக் கனவு முடிவுக்கு வந்தது. இதனால் அவர் உடனடியாக ரியோவிலிருந்து இந்தியா திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Find Out More:

Related Articles: