ரியோ:
உறுதி... உறுதி... நமக்கு பதக்கம் உறுதி... என்று நம்ம சிந்து பதக்கத்தை உறுதி செய்துவிட்டார்.
பாட்மின்டன் அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து வெற்றிப்பெற்று பைனலுக்கு முன்னேறினார். இதனால் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு அடுத்த பதக்கம் உறுதியாகிடுச்சு.
மகளிருக்கான பாட்மின்டனில் இந்திய வீராங்கனை சிந்து, காலியுறுதியில் வெற்றிப்பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இதையடுத்து அவர் அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனை நொசாம்பி ஓக்குஹாரா எதிர்கொண்டார்.
துவக்கம் இருந்தே ஆதிக்கம் பெற்று வந்த சிந்து முதல் செட்டை 21-19 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றிய சிந்து அடுத்தடுத்து தனது ஆவேசமான ஆட்டத்தில் நொசாம்பியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். இதையடுத்து பைனலில் சிந்து உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஸ்பெயின் நாட்டின் கரோலினா மெரினை எதிர்கொள்கிறார்.
பைனலில் சிந்து வெற்றி பெற்றால் இந்தியாவிற்கு தங்க பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும் பைனலுக்கு தகுதி பெற்றதன் மூலம் வெள்ளிப் பதக்கத்தை சிந்து உறுதி செய்துள்ளார். இதையடுத்து இவரை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். தங்கம் வென்று தாம்மா தங்கம்மா...