சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோடா... மவனே... மவனே!

frame சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோடா... மவனே... மவனே!

Sekar Tamil
ரியோ:
சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோடா மவனே... மவனே என்று தன் தங்க மகனிடம் கோரிக்கை விடுத்துள்ளார் இந்த தாய். யார் தெரியுங்களா...


ஓட்டத்தின் புயல் உசைன் போல்ட் தாயார்தான் அவர். உசைன் போல்ட் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தான் விரும்புவதாக அவரது தாயார் ஜெனிபர் போல்ட் தெரிவித்துள்ளார்.


ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில், 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உசைன் போல்ட் தங்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றிலேயே 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை ”வேகமான மனிதன்” என்றழைக்கப்படும் உசைன் போல்ட் பெற்றிருக்கிறார்.


ஒலிம்பிக்கில் தன் மகன் தங்கம் வென்றுள்ளதை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாக தெரிவித்த அவர் தன் மகன் திருமண வாழ்க்கைக்குள் தன்னை இணைத்துக்கொண்டால் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். பேரக் குழந்தைகளைக் காண ஆவலுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


கடந்த மாதம் டெலிகிராப் இதழுக்குப் பேட்டி அளித்திருந்த உசைன் போல்ட், திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் தற்போது இல்லை. 35 வயதைக் கடந்த பிறகே திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அம்மா பேச்சை கேளுப்பா... கேளுப்பா...


Find Out More:

Related Articles:

Unable to Load More