டில்லி:
கனவு கலைந்தது... இந்திய தடகள வீராங்கனையின் கனவு கலைந்தது என்றுதான் சொல்லவேண்டியுள்ளது.
ஒலிம்பிக் தடகள போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் வட்டு எறிதலில் இந்திய வீராங்கனை கிருஷ்ணா பூனியா (34) கலந்து கொண்டார்.
இதில் அவர் 57.10 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். ஆனால் இது ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் தூரம் அல்ல. இதற்கு 61 மீட்டர் எறிய வேண்டும். எனவே ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை அவர் இழந்தார். இதனால் அவரது ஒலிம்பிக் கனவு கலைந்துள்ளது.
பல சாதனைகளை படைத்த இவர் ஒலிம்பிக் போட்டிக்காக பல கட்ட பயிற்சிகள் பெற்றார். 59.49 மீட்டர் தூரம் வரை வட்டு எறியும் திறனுடன்தான் அமெரிக்க தடகள போட்டியில் கலந்து கொண்டார்.
ஆனால் அவரால் குறிப்பிட்ட அளவிற்கு வட்டு எறிய முடியாமல் போய்விட்டது.