எதிரிக்கு கிலி... சர்வீஸ்களில் நெருப்பு பொறி...  விம்பிள்டன் அரையிறுதியில் செரினா வில்லியம்ஸ்

frame எதிரிக்கு கிலி... சர்வீஸ்களில் நெருப்பு பொறி... விம்பிள்டன் அரையிறுதியில் செரினா வில்லியம்ஸ்

Sekar Chandra
லண்டன்:
திணற...திணற அடித்து எதிரியை துவம்சம் செய்துள்ளார் இவர். இவரது ஆட்டம் எப்போதும் அதிரடியாக இருந்தாலும் இப்போது "நெருப்புடா" என்றுதான் சொல்ல வேண்டி உள்ளது.


விஷயம் என்னன்னா? விம்பிள்டன் அரையிறுதி போட்டியில் உக்ரைன் வீராங்கனையை 6-2, 6-0 என நேர்செட் கணக்கில் செரீனா வி்ல்லியம்ஸ் துவம்சம் செய்தார்.


இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இன்று பெண்களுக்கான அரையிறுதி போட்டியில் உண்மையிலேயே நெருப்பு பறக்காத குறைதான். நடப்பு சாம்பியன் செரீனா வி்ல்லியம்ஸ் உக்ரைன் வீராங்கனையான எலேனா வெஸ்னினாயை தன் சர்வீஸ்களால் அதிரடித்து 6-2, 6-0 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றார். இதையடுத்த அவர் இறுதிபோட்டிக்கு முன்னெறினார்.


இதன் மூலம் 9-வது முறையாக விம்பிள்டனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதில் சாம்பியன் பட்டம் வென்றால் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஸ்டெபிகிராபின் சாதனையை இவர் சமன் செய்வார். இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி...


Find Out More:

Related Articles:

Unable to Load More