இந்தியாவின் புகழ் கொடி உங்கள் கையில்... ஒலிம்பிக் போட்டிக்கு 103 வீரர் தகுதியால் மகிழ்ச்சி

Sekar Chandra
புதுடில்லி:
குவிக்கணும்... அதிகமாக பதக்கம் குவிக்கணும்... இந்தியாவின் ஆசையை தகுதிப்பெற்றுள்ள 103 வீரர்கள் நிறைவேற்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு எகிறு... எகிறு என்று எகிறியுள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா.


பிரேசிலின் ரியோ நகரில் வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது. பல நாடுகளிலிருந்தும் திறமையான ஆயிரக்கணக்காக விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஒலிம்பிக்கை விளையாட்டு திருவிழா என்றே சொல்லலாம். 


இதில் பதக்கம் வெல்வதுதான் பல்வேறு நாட்டு விளையாட்டு வீரர்களின் கனவாக உள்ளது. லட்சியமாக உள்ளது. இந்த முறை ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டை ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் எந்த ஆண்டும் இல்லாத வகையில் 103 வீரர்கள் இந்தாண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதுதான் இந்தியாவின் மகிழ்ச்சிக்கு கூடுதல் காரணம். 


2012ல் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 83 பேர்தான் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை முறியடித்து இந்த ஒலிம்பிக் போட்டிக்கு 103 பேர் இதுவரை தகுதி பெற்று உள்ளனர். எனவே இந்தியாவுக்கு கூடுதல் பதக்கம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வீரர்களே இந்தியாவின் புகழ் கொடியை ரியோவில் பறக்க விடுங்கள்... இந்தியர்கள் நினைத்தால் இமயமும் கடுகளவுதான்...


Find Out More:

Related Articles: