கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுவது எப்படி?

Sekar Tamil
இன்று நாம் அனைவரும் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி வருகிறோம். இன்று மாலையில் கிருஷ்ணருக்கு பூஜை எப்படி செய்ய வேண்டும் என்ற வழிமுறையை இப்போது நாம் பார்க்கலாம்.


வீட்டின் பூஜை அறையில், கிருஷ்ணரின் படத்தை பூக்களால் அலங்கரித்து, நெய் தீபம் ஏற்றி கொள்ள வேண்டும். 



விளக்கு முன்பு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு போன்ற பூஜை பொருட்களுடன்,  கிருஷ்ணருக்கு பிடித்த சீடை, முறுக்கு, தட்டை, லட்டு,  தேன்குழல், சர்க்கரை கலந்த வெண்ணெய் உள்ளிட்ட பிரசாதங்களை படைக்க வேண்டும். 



வீட்டில் இருக்கும் குழந்தைகளை கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரித்து, அவர்களுக்கு இந்த பிரசாதத்தை ஊட்ட வேண்டும்.


குழந்தைகளுக்கு கிருஷ்ணரின் கதையை சொல்லி, பூஜையை நடத்தி வந்தால், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். இவ்வாறு வழிபட வேண்டும்.


மேலும் குழந்தை இல்லாதவர்கள், கிருஷ்ண ஜெயந்தி அன்று கண்ணனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். 


Find Out More:

Related Articles: