குழந்தை பாக்கியத்தை அருளும் மாசாணி அம்மன்

Sekar Tamil
கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி ஊரில், ஆனைமலை என்னும் சிற்றூரில், மாசாணி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசாணி அம்மன் சிறப்பாக வீற்றிருக்கிறார். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட்ட பின்பு, குழந்தை பேரு அடைந்துள்ளனர். 


இந்த கோவிலில் ஒரு வழக்கம் உள்ளது, பக்தர்கள் தங்கள் குறைகளையும், தேவைகளையும் ஒரு காகிதத்தில் எழுதி, அதனை பூசாரியிடம் கொடுத்து, அன்னையின் பாதத்தில் சமர்பிக்கின்றனர். இதை அன்னை ஏற்று கொண்டு, மூன்று வாரங்களில் அவர்களின் குறைகளை தீர்த்து அருள் புரிகிறாள்.


மேலும் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமை மாசாணி அம்மனுக்கு விசேஷமான நாளாகும். அன்றைய தினத்தில் பெண்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டால், குறைகள் நீங்கி வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. 


மேலும் எதிரிகளின் தொல்லையினால் பாதிக்கப்படுபவர்கள், பொருட்களை தொலைத்து தவிப்பவர்கள், வியாபாரத்தில் பெருநஷ்டம் கண்டவர்கள் போன்றவர்கள், அன்னையிடம் முறையிடலாம். அங்குள்ள ஆட்டுரலில் மிளகாயை அரைக்க வேண்டும். பின்பு, அரைத்த அந்த மிளகாய் விழுதை அங்குள்ள நீதிக்கல்லின் மீது ஆழந்த பக்தியுடன் பூசி, அம்மனிடம் எடுத்துரைக்க வேண்டும்.. இவ்வாறு செய்வதனால், பக்தர்களின் குறைகள் விரைவில் தீர்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது..


Find Out More:

Related Articles: