திருமண தடை இருப்பவர்களும், திருமண வாழ்வில் பிரச்சனைகள் இருப்பவர்களும் இந்த விரதம் இருக்கலாம். சிவனுக்கு உகந்த இந்த சோமவார விரதத்தை நாம் முறையாக பின்பற்றினால், திருமண வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளும், திருமண தோஷம் உள்ளவர்களுக்கு, தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
கார்த்திகை மாதம் வரும் அனைத்து திங்கள் கிழமைகளிலும், சிவபெருமான் கடவுளை நினைத்து, இந்த விரதம் இருக்க வேண்டும். இரவு மட்டும் உணவு உட்க்கொள்ள வேண்டும். காலையிலும், நண்பகலில் உணவு உட்கொள்ள கூடாது. முடியாதவர்கள் காலையில் உணவு உண்ணலாம்.
விரதம் மேற்கொள்பவர்கள் அன்றைக்கு, சிவாலயம் சென்று வருவது மிகவும் நல்லது. இந்த விரதத்தை மேற்கொண்டால், திருமண தடைகள் நீங்குவதோடு, திருமணம் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளும் சரியாகும்.