என் மனைவி கிட்டயிருந்து டைவர்ஸ் கொடுத்துருங்க.. அலறியடித்து ஓடி வந்த கணவர்!

frame என் மனைவி கிட்டயிருந்து டைவர்ஸ் கொடுத்துருங்க.. அலறியடித்து ஓடி வந்த கணவர்!

SIBY HERALD
"ஐயா.. என் பொண்டாட்டி கிட்ட இருந்து எனக்கு எப்படியாவது டைவர்ஸ் தந்துடுங்க.. என்னால முடியல" என்று கணவர் ஒருவர் கோர்ட் படியேறி உள்ளார். இதற்கு என்ன காரணம் என்பதை அறிய முயன்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது! உத்தரப் பிரதேசம் மீரட் நகரைச் சேர்ந்த ஒருவர், மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவருக்கு கல்யாணம் ஆகி 10 வருஷங்கள் ஆகிறது...3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் விவாகரத்துக்கு என்ன காரணம் என்பதை அறிய நீதிமன்ற குடும்பநல ஆலோசகர் முற்பட்டார். அப்போதுதான் காரணத்தை அறிந்து ஆடிப்போய்விட்டார்.
Image result for husband asks divorce from wife from UP Meerut


சில மாதங்களுக்கு முன்பு கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதனால் இவரது மனைவி, ஒரு மந்திரவாதியிடம் சென்று, கணவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு அந்த மந்திரவாதி, தினமும் கணவருக்கு காலையில் 4 லட்டு, சாயங்காலம் 4 லட்டு சாப்பிட தரணும். இதை தவிர வேறு எதையுமே சாப்பிட தரக்கூடாது, லட்டு தவிர எந்த சாப்பாடும் அவர் சாப்பிடவே கூடாது" என்று சொல்லி உள்ளார். மந்திரவாதி சொன்னபடியே, கணவருக்கு தினமும் காலை, சாயங்காலம் என 8 லட்டுக்களை சாப்பிட தந்துள்ளார் மனைவி. பசி எடுக்கிறது என்றாலும் வேறு சாப்பிட தருவது இல்லை. தினமும் லட்டுக்களை சாப்பிட்டு சாப்பிட்டு வெறுத்து போன கணவனுக்கு, உடம்பும் பாதிக்கப்பட்டு விட்டது.



அதனால்தான் மனைவியிடம் இருந்து டைவர்ஸ் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து, நீதிமன்ற குடும்பநல ஆலோசகர் கணவன், மனைவிக்கும் கவுன்சிலிங் தர முடிவு செய்து கவுன்சிலிங் மையத்துக்கு அனுப்பியுள்ளார். அங்கே மனைவியிடம் இதை பற்றி எவ்வளவோ அறிவுறுத்தியும் அவருக்கு எதுவுமே காதில் எடுபடவில்லையாம். தீவிர மூடநம்பிக்கையில் ஊறி போயுள்ளாராம். வெறும் லட்டு சாப்பிட்டால் கணவர் உடல் சரியாகும் என்று இன்னமும் நம்புவதுடன், வேறு எதுவுமே அவர் காது கொடுத்துகூட கேட்கவில்லையாம்.


Find Out More:

Related Articles: