சூர்யாவை ஆதரித்த கமல் ஹாசன்!

frame சூர்யாவை ஆதரித்த கமல் ஹாசன்!

SIBY HERALD

நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை பற்றி பேசியது  பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், ஹெச்.ராஜா உள்பட சிலர் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Image result for suriya with Kamal

அந்த அறிக்கையில் அவர் "ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ/ மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார்கள். எனவே கல்வி குறித்து பேச உரிமை சூர்யாவுக்கு உண்டு. புதிய கல்விக் கொள்கை குறித்த தம்பி சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு.




மக்களின் கருத்தை அறிவதற்காக என்று வெளியிடப்பட்டிருக்கிற வரைவு அறிக்கை மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்க போக்கினை மக்கள் நீதி மையம் வன்மையாக கண்டிக்கிறது. தம்பி சூர்யாவுக்கு ஆதரவு கண்டிப்பாக உண்டு என்று கமல்ஹாசன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Find Out More:

Related Articles:

Unable to Load More