
கல்லூரிகளில் ஹிந்தி கட்டாயம்!

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பின் புதிய கல்விக்கொள்கை கஸ்தூரி ரங்கன் குழு கொடுத்தது. அந்த குழு பரிந்துரைப்படி 6ம் வகுப்பு முதல் 3வது மொழியாக இந்தி கட்டாயம் என அறிவித்தது அரசு .
தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்ப அறிவிப்பை அரசு வாபஸ் பெற்றது. இந்நிலையில் பல்கலைக்கழக மானிய குழு இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இளநிலை பட்டப்படிப்பில் இந்தி பாடம் கட்டாயம் என அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழககுழு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.