
திமுக பக்கம் சாயும் கமல்?
ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய அதிமுக எம்எல்ஏக்கள் அமமுக கட்சியில் இருப்பதாக அதிமுகவை சேர்ந்த ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்ததால் எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.
சபாநாயகரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாம் என்று திமுக முடிவு செய்துள்ளது. திமுகவின் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.