மோடியா ?நேருவா? அவரே கன்பியூஸ் ஆயிட்டார் போல

SIBY HERALD
இணையத்தின் பிரபல தேடுதல் தளமான கூகுள், மக்களுக்கு ஒரு பேரதிர்ச்சியை தந்துள்ளது. இந்தியாவின் முதல் பிரதமர் யார் என்று தேடி பார்த்தால் , கூகுள், இந்தியாவின் இன்றைய பிரதமரான நரேந்திர மோடியின் புகைப்படத்தை காட்டுகிறது. இதற்கு காரணம் விக்கிப்பீடியாவில் மோடியின் புகைப்படம் இருந்ததே என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 



இதனால் இந்த விஷயம் நேற்று முழுவதும் இணையம் முழுக்க வைரல் ஆனது. எப்போது சிக்குவார்கள் வச்சு செய்யலாம் என்ற ரீதியில் காத்து கொண்டே இருக்கும்  காங்கிரஸ் கட்சி, இது தான் சாக்கு என பாஜகவை வாரிவிட்டது. ஏற்கெனவே, பாஜக கட்சியினர் வரலாற்றை தவறாக பேசி பரப்பி வருபவர்கள், என்று குற்றம் சாட்டி வரும் கட்சி தான் கங்கிராஸ். இப்பொழுது, இந்த கூகுள் சம்பவம் அவர்களுக்கு மெல்லுவதற்கு அவல் கிடைத்தாற்போல ஆகிவிட்டது. 



செய்த மோசடிகள் எல்லாம் போதாது என்று கூகுளையே குழப்பி மோசடி செய்துள்ளது வருத்தம் தருகிறது என்று காங்கிரஸ் கூறியுள்ளது. இது மட்டுமின்றி, பல தலைவர்கள் படங்கள் தவறாகவே வருகிறது. முதல் நிதி அமைச்சர் யாரென்றால் அருண் ஜெட்லீ படமும், முதல் பாதுகாப்பு துறை அமைச்சர் என தேடினால் நிர்மலா சீதாராமன் படமும் என ,,பல காமெடிகள் கூகுளில் அரங்கேறி உள்ளன. இதற்கு கூகுளின் ஒரு தவறான அல்காரிதமே காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டு, சரி செய்யப்பட்டது. 


Find Out More:

Related Articles: