கமலஹாசன் - கெஜ்ரிவால் சந்திப்பு... தேசிய அரசியலுக்குள் நுழைகிறாரா கமல்?

J Ancie


தமிழக அரசியல் தன்னைச் சுற்றி  சுற்றி வரும் வகையில் ஆக்கபூர்வமாக புத்திசாலித்தனமாக திட்டமிட்டு அரசியல் செய்தவர் மு.கருணாநிதி.   பத்திரிகை, வானொலி என தகவல் தொடர்பு குறுகிய வட்டத்துக்குள் இருந்த காலங்களில் அனல் பறக்கும் வகையில் அரசியல் சம்பவங்களை அரங்கேற்றி தமிழகம் தன்னை பற்றி மட்டுமே பேச வைத்த அதிபுத்திசாலி அரசியல்வாதி கருணாநிதி. அவரால் கலைஞானி என்று அழைக்கப்பட்ட நடிகர் கமல் ஹாசன் கருணாநிதியின் பாணியை கடைபிடிக்க தொடங்கி விட்டார் என்றே அவரை மதிப்பிட வேண்டியிருக்கிறது.




ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக கமல் டிவிட் செய்த போது அரசியல்வாதிகளும், சினிமாகாரர்களும் அவரை விருமாண்டி கமலஹாசனாக பார்த்தார்கள். அடுத்தடுத்து தமிழக அரசியல் கூத்துக்களை அழகாய் கிண்டலடித்து, வேதனை தெரிவித்து கமல் அனல் கக்கும் பதிவுகள் தன் டுவிட்டரில் பதிவு செய்த போது அதற்கு பதில் சொல்வதற்கே தமிழக அரசு சில மந்திரிகளை நியமித்த கூத்து நடந்ததுகெஜ்ரிவால் - கமல் சந்திப்பு முடிந்து பத்திரிகையாளர்களிடம் இருவரும் சேர்ந்து பேசியபோது ஊழல், மதவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என ஒருமித்த கருத்தை இருவரும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.




இதன் மூலம் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக புதியதோரு அணி அமைக்கும் முயற்சியை கெஜ்ரிவால் கமல் மூலம் தொடங்கியிருப்பதாகவே தெரிகிறது.


Find Out More:

Related Articles: