இது புதுசா இருக்கே!!நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடிட்டு கள்ளுக் கடையைத் திறப்போம்.. கமுதியில் சீமான் அதிரடி
பின்னர், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கமுதியில் உள்ள ஒரு சிறுவர் பூங்கா அருகில் நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அதில் பங்கேற்று சீமான் பேசியதாவது: நம் நாட்டு விவசாயிகளிடம் இருந்து நிலத்தை நாம் தமிழர் அரசுக் குத்தகைக்கு எடுத்து அந்த மண்ணை ஆய்வு செய்து பண்ணை அமைப்போம். எந்த நிலத்தில் என்ன நன்றாக விளையும் என்று அறிந்த பின்னர் அதனை மட்டுமே அங்கு விளையச் செய்வதற்கான முயற்சி செய்வோம். அதனைச் சுற்றி அதற்கான தகுந்த தொழிற்சாலைகளை அமைத்து வேலைவாய்ப்பை உருவாக்குவோம்