அம்பந்தோட்டா துறைமுகத்தை ராணுவ நடவடிக்கைகளுக்கு சீனா பயன்படுத்த இலங்கை அதிரடி தடை!

J Ancie


சீனா தான் செலவில் கட்டிய சர்ச்சைக்குரிய அம்பந்தோட்டா துறைமுகத்தை எந்த சூழலிலும் ராணுவ நடவடிக்கைக்கு பயன்படுத்த தடை விதிக்கும் வகையில் இலங்கை அரசு அதிரடியாக  நடவடிக்கையாக ஒப்பந்தத்தை மாற்றி அமைத்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிடம்  இலங்கை வேண்டுகோள் விடுத்தது. ஆனால் இந்திய அரசு சற்றே அலட்சியமாக இருந்தது.




இதனால் கொழும்பு துறைமுகத்தை சீனா கைப்பற்றி விரிவாக்கம் தன்செலவில்  செய்ய தொடங்கியதுகொழும்பை தொடர்ந்து அம்பந்தோட்டா துறைமுகத்தையும் சீனாவுக்கு தாரை வார்த்து கொடுத்தது இலங்கை. இப்படி இலங்கையின் தென்பகுதி முழுவதும் சீனாவுக்கு போனதில் இந்தியாவுக்கு கடும் அதிருப்தி. அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்தியாவும் சீனாவை அம்பந்தோட்டா துறைமுகம் விஷயத்தில் கட்டுப்படுத்த அழுத்தம் கொடுத்து வந்தது.





இதனால் வேறுவழியின்றி தற்போது சீனாவுடனான துறைமுக பயன்பாட்டு ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி அம்பந்தோட்டா துறைமுகத்தை சீனா ராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சீனா இதுவரை எந்த கருத்து தெரிவிக்கவில்லை. சிக்கிம் எல்லையில் சீனா- இந்தியா இடையே மிகுந்த பதற்றம் நிலவும் நிலையில் இந்த ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்பட்டிருப்பது நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.


Find Out More:

Related Articles: