எனக்கும் கொடநாடு கொள்ளைக்கும் சம்பந்தம் இல்லை
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான சொகுசு கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கோவையைச் சேர்ந்த மர வியாபாரி சஜீவன் அறிக்கை விடுத்துள்ளார். கொடநாடு சம்பவம் நடந்த போது தான் துபாயில் இருந்ததாகவும், சயன், மனோஜ் உள்ளிட்ட யாரையும் தெரியாது என்றும் அவர் கூறினார்.
இந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு கூடலூர், கோவையில் மரக்கடை வைத்துள்ள சஜீவன் என்பவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு விசாரித்ததில் எழுந்தது. முன்னாள் அமைச்சருடன் நெருங்கி தொடர்பில் இருந்த இவர், யாருடைய அனுமதியும் இன்று கொடநாடு பங்களாவிற்கு சென்று வருவார் என்பதாலும் கனகராஜ், சயனுடன் தொடர்பில் இருந்தவர் என்பதாலும் இந்த சந்தேகம் வலுத்தது.
கொடநாடு சம்பவம் நிகழ்ந்த போது அவர் துபாயில் இருந்தார். இது சந்தேகத்தை மேலும் தூண்டிவிடுவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த சில நாட்களாக ஊடக செய்திகளில் அடிபட்டார் சஜீவன். இன்று தன் மீதான சந்தேகத்தை மறுத்துள்ளார்.
இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்று காவல்துறையினர்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கனகராஜ்க்கு தொடர்பு இருக்கிறதா? முன்னாள் அமைச்சர் மில்லருக்கு தொடர்பு இருக்கிறதா என்பது பற்றி தனக்கு எந்த தகவலும் தெரியாது. அதை போலீஸ்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.