துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு சதி சம்பவம்... 32 ஆயிரம் பேர் கைது

frame துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு சதி சம்பவம்... 32 ஆயிரம் பேர் கைது

Sekar Tamil
இஸ்தான்புல்:
32 ஆயிரம் பேரை கைது செய்து இருக்கோம்... இவர்களை விசாரிக்க தனியாக நீதிமன்ற கட்டிடம் கட்டப்படுகிறது என்று துருக்கி அரசு தெரிவித்துள்ளது. எதற்காக தெரியுங்களா?


துருக்கியில் ராணுவத்தின் ஒரு பிரிவினர் கடந்த ஜீலை மாதம் 15-ம் தேதி புரட்சியில் ஈடுபட்டனர். ஆனால் மக்களின் உதவியோடு அந்த புரட்சியை அந்நாட்டின் அதிபர் முறியடித்தார்.


இரு தரப்புக்கும் நடந்த பயங்கர சண்டையில் 265 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இதுதொடர்பாக 3 ஆயிரம் வீரர்கள் கைது செய்யப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியானது.  இந்நிலையில் இந்த ராணுவ புரட்சி முயற்சிக்கு அமெரிக்காவில் வாழும் மதகுரு பெதுல்லா குலன்தான் சதி செய்துள்ளார் என்று துருக்கி அரசு குற்றம்சாட்டி அவரை அமெரிக்கா நாடு கடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.


 இந்நிலையில், ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தொடர்பாக கடந்த ஜீலை மாதம் முதல் இதுவரை 32 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனராம்.


குலன் ஆதரவாளர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தலைநகர் அங்காராவிற்கு அருகில் சின்கான் நகரில் புதிய நீதிமன்ற வளாகம் ஒன்றை துருக்கி அரசு கட்டி வருகிறது என்று தெரிய வந்துள்ளது.


Find Out More:

Related Articles:

Unable to Load More