பநீநகர்:
பாதுகாப்பு பணிகள் அதிகமாகி இருக்காம் சர்வதேச எல்லைப்பகுதியில் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
யூரி தாக்குதலை அடுத்து இந்தியா-பாக்., இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் ஜம்மு பகுதியில் அமைந்துள்ள சர்வதேச எல்லைப் பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவிய 4 பாக்., பயங்கரவாதிகள், யூரி ராணுவ முகாம் மீது நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் பலியாகினர். பின்னர் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் தீவிரவாதிகள் 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் பதற்றம் அதிகரித்துள்ளதால் ஜம்மு பகுதியில் அமைந்துள்ள 198 கி.மீ., நீளம் கொண்ட சர்வதேச எல்லைப் பகுதியில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.