சென்னை:
தில்லாலங்கடி வேலை செய்வது என்றால் கர்நாடகத்திற்கு சர்க்கரை அள்ளி வாயில் கொட்டிக் கொள்வது போல் இருக்கும் என்று தெரிகிறது. விஷயம் என்னவென்றால்...
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவை தொடர்ந்து தமிழகத்திற்கு கர்நாடகா அரசு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. அந்த தில்லாலங்கடி வேலை என்ன தெரியுங்களா?
கடந்த 6ம் தேதி நிலவரப்படி நான்கு அணைகளிலும் 56 டிஎம்சி தண்ணீர் இருப்பதாக கர்நாடகா நீர்வளத்துறை அறிவித்து இருந்தது. ஆனால் தற்போதைய நிலவரப்படி நான்கு அணைகளிலும் 30 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பதாகவும், கடந்த 9 நாட்களில் 26 டிஎம்சி தண்ணீர் காலியாகியுள்ளதாகவும் கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்னும் 10 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டிய நிலையில் கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தற்போது இப்படி ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு உருவாகி உள்ளது.