முடியாது... முடியாது... பிடிவாரண்டை உறுதி செய்த நீதிமன்றம்...

Sekar Tamil
ஸ்டாக்ஹோம்:
அப்படி எல்லாம் முடியாது என்று ஸ்வீடன் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து பிடிவாரண்ட்டை உறுதிப்படுத்தி உள்ளதால் பெரும் பரபரப்பு உண்டாகி உள்ளது.


விஷயம் என்னன்னா? அமெரிக்காவின் மற்றொரு முகத்தை உரித்து காட்டியவர் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜீலியன் அசாஞ்சே. இவர் மீது
கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்டது. தொடர்ந்து ஸ்வீடன் போலீசாரால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்த பிடிவாரண்டை ரத்து செய்ய வேண்டும் என அசாஞ்சே தொடர்ந்த வழக்கைதான் ஸ்வீடன் நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம்  தள்ளுபடி செய்து அதிரடித்துள்ளது. இதுதான் தற்போதைய பெரும் பரபரப்புக்கு காரணமாகி உள்ளது. 


தற்போது ஜீலியன் அசாஞ்சே, லண்டன் நகரில் உள்ள ஈக்வேடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Find Out More:

Related Articles: