சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் கூட்டு ராணுவ பயிற்சியாம்...!

Sekar Tamil
பீஜிங்:
சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் கூட்டு ராணுவ பயிற்சி எடுக்க போறாங்க... எடுக்க போறாங்க... என்ற தகவல்தான் பரபரப்பை கிளப்பி உள்ளது.


சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பகுதியில் வரும் 15-ம் தேதி முதல் ரஷ்யா, சீனா கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்கிறது என்ற தகவல் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.


தென் சீன கடல்பகுதி முழுவதும் தங்களுக்கே சொந்தம் என்று சீனா உரிமை கொண்டாட... ஹலோ...நாங்களும் இருக்கோம் என்று வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே மற்றும் தைவான் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து... தங்களுக்கும் அந்த பகுதியில் பங்கு உண்டு பங்காளி சண்டைக்கு வந்துள்ளன. இப்படி சர்ச்சை எழுந்துள்ள பகுதியில்தான் வரும் 15-ம் தேதி முதல் ரஷ்யா, சீனா கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ள உள்ளது.


இத்தகவலை செய்தி தொடர்பாளர் கலோனல் யங் யுஜின் தெரிவித்துள்ளார். இருப்பினும் குறிப்பாக எந்த இடத்தில் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது என்ற விவரம் மட்டும் தெரிவிக்கப்படவில்லை. 



Find Out More:

Related Articles: