12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திற... கர்நாடகாவிற்கு "குட்டு"

Sekar Tamil
புதுடில்லி:
காவிரி நீர் தொடர்பான விவகாரத்தில் மீண்டும் ஒரு அடி விழுந்துள்ளது கர்நாடகாவிற்கு. என்ன தெரியுங்களா?


காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி, தமிழக அரசு காவிரி மேற்பார்வைக் குழுவை அணுகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


இதற்கிடையில் இடைக்கால உத்தரவாக, கடந்த 5ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தினமும் 15 ஆயிரம் கன அடி வீதம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் போட்டுச்சு அதிரடி உத்தரவை. இதையடுத்து கர்நாடகாவே பற்றி எரிந்தது. உத்தரவிட்டிருந்தது.


 இருப்பினும் நீதிமன்ற உத்தரவை ஏற்று கர்நாடக அரசும் தண்ணீரை திறந்துவிட்டது. ஆனால் காவிரி நீரை திறந்துவிட பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்யக் கோரி கர்நாடக அரசு சார்பில், உச்ச  நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவும் தாக்கல் செய்ய மீண்டும் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா என்ற நிலை எழுந்தது.


 இந்நிலையில் அந்த மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. ஆனால் கர்நாடகத்திற்கு மீண்டும் குட்டுதான் விழுந்துள்ளது. கர்நாடகா தாக்கல் செய்த அந்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.


அதுமட்டுமா? வரும் 20ம் தேதி வரை வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்திற்கு, கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று போட்டுச்சுப்பாருங்க... அடுத்த அதிரடியை.


இதனால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தாலும் கர்நாடகத்தில் தமிழர்கள் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இயற்கை தரும் தண்ணீரை பக்கத்து மாநிலத்திற்கு விடுவதற்கு இவ்வளவு இடைஞ்சல் செய்யும் கர்நாடகம் என்று திருந்தும்.


Find Out More:

Related Articles: