ஐதராபாத்:
ஐதராபாத்தில் நீரிழிவு நோயால் பாதித்த பெண்ணிற்கு 6 கிலோ எடை கொண்ட குழந்தை பிறந்தது டாக்டர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள நிலோபர் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவர் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து டாக்டர்களின் பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து குழந்தை நலமாக இருக்கிறதா? என்பதை அறிய ஸ்கேன் செய்து பார்த்தனர் டாக்டர்கள். அப்போது அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது வயிற்றில் இருந்த குழந்தை 5 கிலோவிற்கு மேல் இருப்பது தெரியவந்தது.
இதனால் டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்தனர். எடைபோட்டு பார்த்த டாக்டர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். தொடர்ந்து அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்க அதன் எடை 6 கிலோ இருந்தது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு 6 கிலோ எடையில் குழந்தை பிறப்பது அரிதிலும் அரிது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர்.