பிலிப்பைன்சில் குண்டு வெடிப்பு; 12 பேர் பரிதாப பலி...

Sekar Tamil
மணிலா:
பிலிப்பைன்சின் தாவே நகரில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் 12 பேர் பலியானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 60க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.


பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கே அமைந்துள்ளது தாவே நகர். இங்கு இரவு நேர சந்தையில் பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. இதில், சம்பவ இடத்திலேயே 10 பேர் பலியாகிவிட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது 2 பேர் இறந்தனர்.


60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. 


பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Find Out More:

Related Articles: