வாழு... வாழ விடு... கர்நாடகத்திற்கு குட்டு வைத்துள்ள நீதிமன்றம்

frame வாழு... வாழ விடு... கர்நாடகத்திற்கு குட்டு வைத்துள்ள நீதிமன்றம்

Sekar Tamil
புதுடில்லி:
வாழு வாழ விடு... என்று காரசாரமாக குட்டு வைத்துள்ளது உச்சநீதிமன்றம் கர்நாடகாவிற்கு. எதற்காக தெரியுங்களா?


தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கு ஓயாத பிரச்னை என்றால் அது காவிரி நீர் பிரச்னைதானே. அதில்தான் இப்படி ஒரு கருத்தை கூறி குட்டு வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.


தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 50 டிஎம்சி நீரை காவிரியில் இருந்து  திறந்து விடாத கர்நாடக அரசை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஒய் சந்திரசூட் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.


அப்போதுதான் நீதிபதிகள் இப்படி கூறியிருக்கிறார்கள். "காவிரி நதி நீர் பிரச்சனையில், தமிழகமும் கர்நாடகமும் நல்லுறவை பராமரிக்க வேண்டும். கர்நாடகாவில் நீர் பற்றாக்குறையா... 50 டிஎம்சி இல்லாவிட்டாலும் வாழ்வாதாரத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து விடவேண்டும். 


எவ்வளவு தண்ணீரை திறந்து விட முடியும் என்பதை வரும் 5-ந்தேதி அன்று பதில் அளிக்க வேண்டும். வாழு வாழ விடு” என்று கூறி உள்ளனர். இந்த புத்திமதியாவது கர்நாடகாவின் காதுகளில் விழுமா... பொறுத்திருந்து பார்ப்போம்...


Find Out More:

Related Articles:

Unable to Load More