ஆஸ்திரேலியா:
ஏங்க உங்களுக்கு வேற படமே கிடைக்கலையா... புன்னகை செய்வது போன்ற படத்தை வெளியிடுங்கள்... இது ஒரு குற்றவழக்கில் தேடப்படும் பெண்ணின் கோரிக்கை.
அடங் கொய்யால... இப்படியும் இருப்பாங்களா என்று கேட்காதீர்கள். இப்படிதான் நடந்துள்ளது. குற்ற வழக்கில் தேடப்படும் ஆஸ்திரேலிய பெண் ஒருவர் தனது சோகமான புகைப்படத்தை மாற்றி, புன்னகையுடன் இருக்கும் அழகான படத்தை வெளியிடுங்க என்று போலீசாரை பேஸ்புக் மூலம் கேட்டுக்கொண்டால் எப்படி இருக்கும்.
அட ஆமாங்க... ஆஸ்திரேலியாவை சேர்ந்த எமி சார்ப் என்ற இளம்பெண், சொத்து தொடர்பான குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்புறம் போலீஸ் காவலில் இருந்து எஸ்கே; ஆக... போலீசார் அவரை கண்டுபிடிக்க அவரது புகைப்படத்தை வெளியிட்டனர்.
இதை தொலைக்காட்சி சேனல் ஒன்று சமூக வலைதளத்தில் செய்தியாக பதிவு செய்தது. இதை பார்த்த எமிசார்ப் டென்ஷனாகி... ஏங்க... அந்த சோகமான போட்டோவை மாற்றிவிட்டு புன்னகையுடன் இருக்கும் படத்தை வெளியிடுங்கள் என்று முதல் கருத்தை பதிவு செய்தார் பாருங்க...
அத்துடன் விட்டாரா? புன்னகையுடன் இருக்கும் அவரின் புகைப்படம் ஒன்றையும் பதிவேற்றி, இதை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்றும் அவர் சொல்ல... போலீசார் டென்ஷனின் உச்சக்கட்டத்திற்கு போய்விட்டனர்.
எமியின் இந்த கருத்திற்கு, சில வினாடிகளில் ‘லைக்’ எண்ணிக்கை ஆயிரத்தை தாண்ட... இப்போ அந்த லைக்குகள் 64 ஆயிரம் ஆகிடுச்சு. இதற்கிடையில் எமி தனது கருத்தை பதிவு செய்த பிறகு, போலீசார் அவரை கைது செய்து விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.