தாஜ்மஹாலை சுற்றி பார்த்து அதிசயித்த மியான்மர் அதிபர்

Sekar Tamil
ஆக்ரா: 
உலக அதிசயத்தை அதிசயத்து பார்த்து மகிழ்ந்துள்ளார் மியான்மர் அதிபர் தன் மனைவியுடன்.


விஷயம் என்னன்னா? இந்தியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள மியான்மர் அதிபர் தாஜ்மஹாலை தனது மனைவியுடன் வந்து சுற்றி பார்த்து ரசித்துள்ளார்.


மியான்மர் அதிபர் யு ஹிடின் கியாவ் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இது வெளிநாட்டில் அவர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இவர் தனது மனைவியுடன் தாஜ்மஹாலுக்கு வந்தார். பின்னர் சுற்றிப்பார்த்து அதன் அழகை ரசித்தார். இவர் வருகையால் சுற்றுலாப்பயணிகளுக்கு டிக்கெட் விற்கப்படவில்லை. 


Find Out More:

Related Articles: