குறைந்த வயது... தன்னந்தனி பயணம்... வானில் வாலிபரின் சாதனை...

Sekar Tamil
ஆஸ்திரேலியா:
சாதனை... சாதனை என்று மிக குறைந்த வயதில் தனியாக விமானத்தை ஓட்டிச்சென்று சாதனை படைத்துள்ளார் ஒரு இளைஞர். என்னன்னு பார்ப்போமா!


உலகிலேயே மிகக் குறைந்த வயதில் 15 நாடுகளுக்குத் தனியாக விமானத்தை ஓட்டிச் சென்று ஆஸ்திரேலிய இளைஞர் சாதனை படைத்துள்ளதுதான் தற்போதைய ஹாட் டாபிக்.


ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்தைச் சேர்ந்தவர் லக்லான் ஸ்மார்ட். இவர்தான் இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.  தனியாக விமானத்தை ஓட்டிக்கொண்டு பல்வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என விரும்பிய இவர் மருச்சிடோர் விமான நிலையத்தில் இருந்து கடந்த ஜீலை 24ஆம் தேதி தனது பயணத்தைத் தொடங்கினார்.


15 நாடுகள்... 24 இடங்களுக்குச் சென்ற அவர், பயணத்தை முடித்துக் கொண்டு சொந்த நாட்டுக்கு திரும்பினார். அப்புறம் என்ன சாதனை மன்னன் ஸ்மார்ட்டுக்கு விமான நிலையத்தில் செம வரவேற்புங்க...


18 வயது 7 மாதம் 21 நாட்களில் விமானத்தைத் தனியாக ஓட்டி ஸ்மார்ட் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.



Find Out More:

Related Articles: