அப்போ ரிஜெக்ட் செய்ததற்கு... இப்போ நன்றி... மத்திய அமைச்சர்

Sekar Tamil
புதுடில்லி:
அப்போ ரிஜெக்ட் செய்ததற்கு இப்போ... நான் நன்றி சொல்கிறேன் என்று தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் ஒருவர்.


யார் தெரியுங்களா? சர்ச்சைக்கு பேர் போன ஸ்மிருதி இரானிதான் அவர். கேபினட் மந்திரியாக வலம் வந்த ஸ்மிருதி இரானி பல சர்ச்சைகளால் தற்போது ஜவுளி துறை அமைச்சராக உள்ளார்.


இவர் டில்லியில், இந்திய விமானப் பயணிகளின் சங்கம் ஏற்பாடு செய்த, ஜெட் ஏர்வேஸ் அதிகாரபூர்வ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருதுகள் வழங்கினார். அப்போது இவர் தன் மனதிற்கு வைத்திருந்த ஒரு விஷயத்தை போட்டு உடைச்சார் பாருங்க...


நான் முதல் முதலாக ஜெட் ஏர்வேஸில் அறை குழு உறுப்பினர் பணிக்கு தான் விண்ணப்பித்தேன். ஆனால் அவர்கள் எனக்கு ஆளுமை திறமை இல்லை என்று கூறி நிராகரித்து விட்டனர். அவர்கள் என்னை நிராகரித்ததற்கு நான் இப்போது தேங்க்ஸ் சொல்லிக் கொள்கிறேன் என்றாரே பார்க்கலாம். அதாவது அவர்கள் இவரை செலக்ட் செய்திருந்தால் அரசியலுக்கு வந்திருக்க முடியாது என்பதை இப்படி சொல்லியுள்ளார். 


ஸ்மிருதி இரானி அரசியலில் நுழைவதற்கு முன்பு, அழகு அலங்கார அணிவகுப்பில் பங்கேற்றுள்ளார், தொலைக்காட்சி தொடர்களை தயாரித்தும் நடித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Find Out More:

Related Articles: