2 மாதம்... 40 கத்தியை விழுங்கிய பஞ்சாப் போலீஸ்காரர்...

frame 2 மாதம்... 40 கத்தியை விழுங்கிய பஞ்சாப் போலீஸ்காரர்...

Sekar Tamil
அமிர்தசரஸ்:
அட கொய்யால... அது என்ன அல்வா என்று நினைச்சியா என்றுதான் கேட்க தோன்றுகிறது. இதற்கு இவர் பின்னணியில் ஆன்மீக சக்தி என்று பில்டப் வேறு கொடுத்துள்ளார். என்ன விஷயம் தெரியுங்களா?


பஞ்சாபில் போலீஸ்காரர் ஒருவர் வயிற்றில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் 40 கத்திகள் அகற்றப்பட்டன. இதற்கு அவர் போலீஸ்காரர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுங்களா? ''இதன் பின்னணியில், ஆன்மிக சக்தி இருந்தது,'' என்று.


பஞ்சாப்பில் போலீசாக பணியாற்றி வருபவர் சுர்ஜித் சிங் (42). கடந்த இரண்டு மாதங்களாக இவர் கத்திகளை விழுங்கியுள்ளார். கத்திகள் உள்ளே போனால் அதன் வேலையை காட்டாதா? காட்டின... இதனால் கடுமையான வயிற்று வலி ஏற்பட உடனே மருத்துவமனையில் அட்மிட்.


அவரது வயிற்றை, 'ஸ்கேன்' செய்து பார்த்த டாக்டர்கள் மயங்கி விழாத குறைதான். அப்புறம் என்னங்க... குடல், கல்லீரல் தெரியும் என்று பார்த்தால் பழைய காயலான் கடை போல் கத்திகளாக இருந்தால் எப்படி இருக்கும். 


அப்புறம் என்ன கத்திகளை எடுக்க டாக்டர்கள் கத்தி எடுக்க வேண்டிய நிலை. அறுவை சிகிச்சை செய்து கத்திகளை அகற்றி எண்ணி அகற்றி எண்ணிப்பார்த்தால் 40 இருந்துள்ளது. நல்லவேளை பெரிய காந்தம் பக்கம் மனுசன் போயிருந்தால் அவ்வளவுதான். 


சிகிச்சைக்கு பின், உடல்நலம் தேறியுள்ள அவர், கத்தியை விழுங்கியது குறித்து விளக்கம் அளித்துள்ளார். என்னன்னு தெரியுங்களா? 'இதை ஏன் செய்தேன் என, தெரியவில்லை; ஆனால், இதன் பின்னணியில், ஆன்மிக சக்தி இருந்துள்ளது. ஜீன் மாதம், முதன்முதலாக கத்தி ஒன்றை எடுத்து விழுங்கினேன். மகிழ்ச்சியாக இருந்தது. (அடப்பாவி) பின், அடுத்தடுத்து கத்திகளை விழுங்கினேன்' என்று சொல்லியிருக்கிறார். 


இந்த மாதிரியான ஆட்களை என்ன சொல்வது.


Find Out More:

Related Articles:

Unable to Load More