இந்தியா முடிவு திட்டவட்டம்... சீனா எதிர்க்குது...எதிர்க்குது...

Sekar Tamil
புதுடில்லி:
இந்தியாவின் முடிவுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் தன் நிலையில் இருந்து இந்தியா மாறவில்லை என்று கூறப்படுகிறது.


வடகிழக்கு மாநிலங்களில் பிரமோஸ் ஏவுகணையை நிறுவ இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா இந்த நடவடிக்கை எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் நிலைத்தன்மையில் எதிர்மறை சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.


கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை குழு கூட்டத்தில், வடகிழக்கு மாநிலங்களில் பிரமோஸ் ஏவுகணையை நிறுவ ஒப்புதல் வழங்கப்பட்டது.


இது பிரமோஸ் ஏவுகணை சீனா உரிமை கொண்டாடும் அருணாச்ச பிரதேசத்தில் நிறுவப்பட உள்ளது. இந்நிலையில் இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன ராணுவத்தின் பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தியில், எல்லையில், பிரமோஸ் ஏவுகணையை நிறுவுவது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் மற்றும் யுனான் மாகாணங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.


இந்த ஏவுகணையை நிறுவுவதால், இரு நாட்டு உறவில் போட்டி மற்றும் முரண்பாடு ஏற்படும். இரு நாட்டு உறவில் நிலவும் சூழலில் எதிர்மறை சூழ்நிலையை ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.



Find Out More:

Related Articles: