குற்றச்சாட்டு பதிவாகிடுச்சு... நிலக்கரி சுரங்க ஊழலில்தான்...

Sekar Tamil
புதுடில்லி:
குற்றச்சாட்டை பதிவு செய்துட்டாங்க... பதிவு செய்துட்டாங்க என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.


யார் மீது இந்த குற்றச்சாட்டு பதிவு என்கிறீர்களா? இதோ... நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பான விசாரணையில்தான் அந்த துறை முன்னாள் செயலாளர் உள்பட 5 பேர் மீது நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.


நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கு டில்லி சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் நிலக்கரி துறை செயலாளர் எச்.சி.குப்தா, நிலக்கரி துறை அமைச்சக முன்னாள் இணை செயலாளர் கே.எஸ்.குரோவா, இயக்குனர் கே.சி.சாம்ரியா ஆகியோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.


இதுமட்டுமா? விகாஷ் மெட்டல்ஸ் மற்றும் பவர் லிமிடெட், அதன் அதிகாரிகளும் இதில் உடந்தை என்று தெரிய வந்ததை அடுத்து அவர்கள் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.


இவர்கள் மீது மோசடி மற்றும் குற்றச்சதி உள்ளிட்ட பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இனி விசாரணை விரைவில் நடக்கும் என்று தெரிவதால் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பு ஆரம்பம் ஆக தொடங்கி உள்ளது.



Find Out More:

Related Articles: