அமர்நாத் புனித யாத்திரை நிறைவு... குறைந்த பக்தர்களே வருகை...

frame அமர்நாத் புனித யாத்திரை நிறைவு... குறைந்த பக்தர்களே வருகை...

Sekar Tamil
ஜம்மு-காஷ்மீர்:
கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கிய அமர்நாத் புனித யாத்திரை ரட்சா பந்தன் பண்டிகையான நேற்றுடன் நிறைவடைந்தது.


காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஒருமாதமாக மிகுந்த பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையிலும், அமர்நாத் யாத்திரையில் 2.2 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். கடந்த பத்தாண்டுகளில் வந்த பக்தர்களை விட இந்த ஆண்டு குறைவான பக்தர்கள்தான் வந்துள்ளனர்.


இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், புனித அமர்நாத் யாத்திரையின் நிறைவு நாளையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் புனித தண்டாயுதத்தை திருப்பி எடுத்துச் செல்லும் யாத்திரை தொடங்கியது. அமர்நாத் யாத்திரை நேற்று சம்பிரதாயமாக நிறைவடைந்தது. எனினும், பஹல்காமில் ஓடும் லித்தர் நதியில் புனித தண்டாயுதத்தை விசர்ஜனம் செய்யும் சடங்கு சனிக்கிழமை நடந்து முடிந்த பிறகே, யாத்திரை அதிகாரபூர்வமாக நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



Find Out More:

Related Articles:

Unable to Load More