சென்னை:
இல்லை... இல்லை... நான் இல்லை. என் மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர் என்று முதல்முறையாக ராம்குமார் கொடுத்துள்ள "வாய்ஸ்" பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது திடீர் திருப்பமாகவும் அமைந்துள்ளது.
தமிழகத்தை உலுக்கிய சுவாதி கொலை வழக்கு பற்றி அனைவரும் அறிந்ததுதான். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரின் கையெழுத்தை பெற அவரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
அப்போது “கையெழுத்திட விருப்பமா?” என்று நீதிபதி கேட்டார். இதற்கு ராம்குமார் “கையெழுத்திட விருப்பமில்லை. நான் சுவாதியை கொலை செய்யவில்லை. போலீசார் பொய்யாக இந்த வழக்கில் என்னை சிக்க வைத்துள்ளனர். நான் தங்கியிருந்த விடுதியில் உள்ள ஏட்டில் நான் கையெழுத்திடவில்லை” என்று சொல்லியதாக அவரின் வக்கீல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ராம்குமாரை 26-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.
ராம்குமார் தான் குற்றவாளி என்று போலீசார் கூறிவந்த நிலையில், தற்போது அவர் இப்படி நீதிமன்றத்தில் கூறியுள்ள விவகாரம், இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்போ... இதுக்கு பின்னாடி என்னதான் மர்மம் உள்ளதோ தெரியவில்லையே...