எம்எல்ஏவின் கோபம்... அறை வாங்கிய சப்கலெக்டர்... பரபரப்பு

Sekar Tamil
மும்பை:
அடித்தார்... எம்எல்.ஏ... வைரலாகுது வீடியோ... ஆனால் இல்லை என்று மறுக்கின்றனர்.


மகாராஷ்டிராவின் ராஜ்கட் மாவட்ட சப்-கலெக்டர் அபய் கர்குட்கரை தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ அடித்து உதைத்த வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.


நிலம் கையகப்படுத்துதல் பிரச்னைகளை தீர்ப்பது தொடர்பான கூட்டம் கடந்த வியாழக்கிழமை மும்பையில் நடந்துள்ளது. இதில் நிலம் கையகப்படுத்திய பின்னர் அரசு கொடுக்க வேண்டிய இழப்பீடு குறித்து எம்எல்ஏவுக்கும், சப்-கலெக்டருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.


அப்போதுதான் எம்எல்ஏ சுரேஷ், சப்-கலெக்டரை கன்னத்தில் அறைந்துள்ளார். மேலும் தாக்கியும் உள்ளார். இந்த வீடியோ தற்போது  சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் இதனை எம்எல்ஏ சுரேஷ் மறுத்துள்ளார். இந்நிலையில் அடி வாங்கிய சப்-கலெக்டர் அபய் கர்குட்கர் இச்சம்பவம் தொடர்பாக கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Find Out More:

Related Articles: