ஐதராபாத்:
மாணவிகளை காப்பாற்றி தன் உயிரை இழந்த தலைமை ஆசிரியரை நினைத்து கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
அந்த சோக சம்பவத்தின் செய்திதான் இது. தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மேடிகொண்டா கிராமத்தில் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் பிரபாவதி.
இந்நிலையில் சுதந்திர தினவிழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதை பிரபாவதி கவனித்து வந்தார். அப்போது கொடி கம்பம் நடப்பட்டது. இதை அங்கிருந்த பள்ளி மாணவிகள் 4 பேர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கொடிக்கம்பம் மேலே சென்ற மின் கம்பியில் சிக்கி அறுந்து மாணவிகள் மீது விழும் வகையில் வந்தது.
அவ்வளவுதான் கண்ணிமைக்கும் நேரத்தில் தலைமை ஆசிரியை பிரபாவதி பதற்றத்துடன் ஓடிவந்து 4 மாணவிகளையும் காப்பாற்ற மின்கம்பி அவர் மீது விழுந்தது. இதில் பிரபாவதி மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே இறந்தார்.
மேலும், மின்சாரம் தாக்கியதில் மாணவிகளும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமை ஆசிரியை இறந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.